Friday, December 6, 2013

மண் அளந்தமால் +கருங்கடலே என் நோற்றாய்!

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு, உறிவெண்ணெய்
தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை - ஊன்றி,
பொருதுடைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும்,
மருதிடைபோய் மண்ணளந்த மால்.
 
இப்பாடலுக்கு  சரியாக  விளக்கம் அறிய இயலவில்லை/...முழுதும் அறிந்து  இடுவதற்கு அரங்கன் அருள் செய்யவேண்டும்
 
 
்  தொடர்வது  இந்தப்பாசுரம்
 
 
 
மாலுங் கருங்கடலே என்நோற்றாய், வையகமுண்
டாலின் இலைத்துயின்ற ஆழியான், - கோலக்
கருமேனிச் செங்கண்மால் கண்படையுள், என்றும்
திருமேனி நீதீண்டப் பெற்று.

வையகம்
-
இவ்வுலகத்தை யெல்லாம்
உண்டு
-
(பிரளயம் கொள்ளாதபடி) திருவயிற்றினுள்ளே வைத்து
ஆலின் இலை
-
ஆலந்தளிரிலே
துயின்ற
-
சயனித்துக் கொண்டவனும்
ஆழியான்
-
திருவாழியை யுடையவனும்
கோலம் கரு மேனி
-
அழகிய கறுத்த திருமேனியையுடையவனும்
செம் கண்
-
செந்தாமரைக் கண்ணனுமான
மால்
-
எம்பெருமான்
கண்படையுள்
-
உறங்குகையில்
என்றும்
-
எப்போதும்
திருமேனி
-
அவனுடைய திருமேனியை
தீண்ட பெற்று
-
ஸ்பர்சிக்கப்பெற்று
மாலும்
-
(அந்த ஸ்பர்ச ஸுகத்தினால்) மயங்கிக்கிடக்கிற
கரு கடலே
-
கரிய ஸமுத்ரமே!
நீ என் நோற்றாய்
-
(இந்தப் பாக்கியம் உனக்குக் கிடைக்குமாறு) நீ என்ன நோன்பு நோற்றாயோ?
 
நீலக்கடலும் மால் பள்ளி கொள்வதால் கருங்கடல் ஆனதுபோலும்.. கம்பராமாயணத்திலும்  ஒரு பாடலில் கருங்கடலில்  பள்ளிகொண்டு என்ற சொல் வரும் இன்னமும் சரியாக அதனி நினைவுபடுத்தி சொல்லவேண்டும்.
 
கடலை நோக்கி  அது செய்த பாக்கியம் என்ன என்று  கேட்கிறார் ஆழ்வார் பெருமான்..  அழகிய பாடல் இது.

Wednesday, December 4, 2013

அடியும் படி கடப்பத் தோள் திசைமேல் செல்ல.....

                                       அடியும் படிகடப்பத் தோள்திசைமேல் செல்ல,
முடியும் விசும்பளந் ததென்பர், - வடியுகிரால்
ஈர்ந்தான் இரணியன தாகம், இருஞ்சிறைப்புள்
ஊர்ந்தா னுலகளந்த நான்றுஇரணியனுடைய  ஆகம் அதாவது மார்பை  வடி உகிரால்= கூர்மையான நகங்களால் ஈர்ந்தான் அதாவது கிழித்தெறிந்தவனும்  இரு சிறை புள் ஊர்ந்தான் என்றால் இரு சிறகுகளைக்கொண்ட  கருடன் மீது ஏறி நடத்துபவனுமாகிய  பெருமான்,  உலகு அளந்த நாளன்று அடியும் அதாவது  திருவடி
படி கிடப்ப =பூமியை அளந்துகொள்ள  தோள்=திருத்தோள்கள்

திசைமேல் செல்ல.....திக்கெங்கும் வியாபிக்க
முடியும்..கிரீடம்

விசும்பு..மேல் உலகத்தை
அளந்தது/...அ்ளவுபடுத்திக்கொண்டது

பின்னடிகளின் கருத்தையும் ஆழ்ந்து நோக்கினால், இரணியனைப்பிளந்து ப்ரஹ்லாதனுக்கு அருள்செய்தகாலத்திலும், ஸ்ரீகஜேந்திராழ்வானைக் காத்தருளப் பெரியதிருவடியின் மீதேறி அரைகுலையத் தலைகுலைய விரைந்தோடி வந்தகாலத்திலும் நேரில் சேவிக்க  இயலாமல் போனோமே  என்ற ஆதங்கம்   தோன்றும்்பெரியோர்  கூறிய  விளக்கம்  இது...

 
இரணியனது
-
ஹிரண்யாஸுரனுடய
ஆகம்
-
மார்வை
வடி உகிரால்
-
கூர்மையான நகங்களாலே
ஈர்ந்தான்
-
கிழித்தெறிந்தவனும்
இரு சிறை புன் ஊர்ந்தான்
-
பெரிய சிறகையுடைய கருடனை ஏறிநடத்து பவனுமாகிய எம்பெருமான்
உலகு அளந்த நான்று
-
உலகளந்த காலத்திலே
அடியும்
-
திருவடி
படி கடப்ப
-
பூமியை அளந்துகொள்ள
தோள்
-
திருத்தோள்கள்
திசைமேல் செல்ல
-
திக்குகளிலே வியாபிக்க
முடியும்
-
கிரீடம்
விசும்பு
-
மேலுலகத்தை
அளந்தது
-
அளவுபடுத்திக்கொண்டது

Tuesday, December 3, 2013

பழுதே பலபகலும் போயின வென்று.....

 
பழுதே பலபகலும் போயினவென்று , அஞ்சி
அழுதேன் அரவணைமேல் கண்டு - தொழுதேன்,
கடலோதம் காலலைப்பக் கண்வளரும், செங்கண்
அடலோத வண்ணர் அடி.
 
 
 
பழுதே  பலபகலும் போயின.....வீணாய்ப்போனதே  என் நாளெல்லாம் என  புலம்புகிறார் ஆழ்வார் பெருமான். அலைவீசும் கடல்மீது  திருவடி  பதித்து  அறிதுயில் கொள்ளும் செங்கண் உடைய 
அடலோத வண்ணர்= ஓதம் என்று கடலுக்கும் அலைக்கும் பெயர்; இவ்விடத்தில்  அலை என்னும் பொருள்  திருமேனியிலே பரவுகின்றலாவண்ய தரங்கங்களைச் சொன்னபடி. அநுபவிக்க வருமவர்களை அடர்த்துத் தள்ளுகிற லாவண்ய தரங்கங்களோடு கூடிய திருமேனியையுடையவர் என்று கொள்ளவேண்டும் என  பாசுரத்திற்குப்பெரியோர் விளக்கம் கூறுகின்றனர்.
அந்தப்பெருமானின் திருவடியை  அஞ்சி அழுதநிலையிலிருந்தவர்  கை தொழுதாராம்!
 
ஆறாம்பாட்டில் “ ஒன்று மறந்தறியேன் ஓதநீர்வண்ணனை நான்” என்றும் “அன்று கருவரங்கத்துக்கிடந்து கைதொழுதேன் கண்டேன்” என்றும் கர்ப்பவாசமிருந்தே    தொழுததாக  சொல்லிக்கொண்ட இதே  ஆழ்வார்  இங்கே  பழுதே பலபகலும் போயினவென்று அழுவதாகச் சொல்லிக்கொள்வதேன் என்பதைஇப்பிறவிக்கு முன்னே   எனகொள்ளவேண்டும் 

Monday, December 2, 2013

முதல் ஆவார் மூவரே!

முதல் ஆவார் மூவரே அம்மூவருள்ளும்
முதல் ஆவான் மூரி நீர் வண்ணன்  முதல் ஆய
நல்லான் அருள்  அல்லால்  நாம நீர் வையத்து
பல்லார் அருளும் பழுது.

பொய்கைஆழ்வார் பெருமானின் 15வது பிரசுரம்

விளக்கம்

தனக்கென்று உருவம் யாதுமில்லாத இறைவன் படைத்தல் காத்தல் அழித்தல்  எனும் முத்தொழில்களை இயற்றி இந்த உலகினை அழிந்துபடாது நிலைபெறச் செய்வான் எடுக்கும் மூவடிவங்களே அயன் நாரணன் உருத்திரன் என்பவை யாகும். இம்மூவருள்ளும் கருங்கடல் வண்ணனாகிய நாரணன் முதல் ஆவான். நீரினை ஆட்சி செய்து அதனின்று பலவற்றை எழச் செய்யும் திருமாலின் அருளின்றி இந்த அச்சம் மிகுந்த வையகத்தில், ஏனையோர் செய்யக் கூடிய அருளாட்சிகளும் பழுதாய் விழும்.

முரி நீர் என்றால் கடல்
கடல் நிறம் கொண்ட திருமாலே  முதல் ஆய நலலன் என்றும் உறுதிபடப் பேசுகிறார், இந்த ஆழ்வார்

Sunday, December 1, 2013

உலகு அளந்த மூர்த்தி உருவே முதல்.

அவர் அவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி,
 இவர் இவர் எம் பெருமான் என்று,
சுவர் மிசை சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகு அளந்த
மூர்த்தி உருவே முதல்
 .
ஆழ்வார் பெருமானின் 14ம் பாசுரம் இது.

அவரவர்கள் தங்கள் தங்கள் மனதிற்கு பட்ட,  அதாவது தாம்அறிந்தவகையில் வணங்குவர்.
இவர் இவர் எம் பெருமான்  என்று அதாவது  மனதிற்குப்பட்ட  உருவங்களை  தேவதைகளை  தெய்வம் என்று  சுவரில்   சார்த்தி அதில் வைத்து என்றெல்லாம்  வணங்குவர்
உலகை அளந்த பெருமானே ஆதிபிரான்( என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்)

உலகளந்த பெருமானை  வணங்காது  ஏதேதோ தெய்வங்களை ஏதேதோ வகையில் தொழுபவர்களைப்பற்றிய ஆழ்வாரின் ஆதங்கம்  பாசுரத்தில்  தெரிகிறது அல்லவா?
 

Saturday, November 30, 2013

ஆதியாய் நின்றார் அவர்!

 
இயல்வாக ஈன்துழா யானடிக்கே செல்ல,
முயல்வார் இயலமரர் முன்னம், - இயல்வாக
நீதியா லோதி நியமங்க ளால்பரவ,
ஆதியாய் நின்றார் அவர்.
 
அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானது திரு வடிகளில் கிட்டுதற்குத் தகுதியாக  முன்னம்(பலகாலமாக)  முயற்சி செய்தவர்கள் (யாரென்றால்) இயல் அமரர் அதாவது தகுதிக்குரிய  நித்ய சூரிகள்,(இவர்களைப்போல நாமும் அவனது திருவடிக்குப்பாத்திரமாக வேண்டுமெனில்)  இயல்வு ஆக--அதற்குப்பொருத்தமாக  நீதியால் ஓதி... வேதம்  ஓதி..நியமங்களால் பரவ--- அந்த வேதம் கூறிய பொருளை அறிந்து அதன்படி நடக்குமாறு ஆதியாய்---முற்பட்டு நிற்கிறார்
அவர்-எம்பெருமான்.
 
எம்பெருமானை  அடைய  நித்யசூரிகளுக்கு மட்டுமில்லை நமக்கும் அத்தகுதியை  உண்டாக்கவே  ஆதியாய்  நமக்காக  நம்மை செயல்படுத்த  பெருமான்  காத்திருக்கிறாராம்  என்னே  கருணை அவனுக்கு!  வேதம் ஓத முடியாதவர்கள்  திவ்யபிரபந்தம் எனும் வேதத்திற்கு சமமான  ஆழ்வார் பெருமான் பாசுரங்கள் வாசித்து ஆழ்ந்து ஆராதனை செய்து உய்வோமாக.

Friday, November 29, 2013

அவியாத ஞானமும் வேள்வியும் நல்லறமும்....

 
செவிவாய் கண்மூக் கு   உடலென் றைம்புலனும்
செந்தீபுவிகால் நீ்ர் விண் பூதமைந்தும் -அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமுமென்பரே
ஏனமாய் நின்றாற் கியல்வு.
 
 
ஏனமாய் நின்றார்க்கு   என்பதை முதலில் கொள்ளவேண்டும் அதாவது  
 
வராஹ அவதாரம் செய்து  தானே  செயல்களைப்புரியும் பெருமானைப்பெறுவதற்கு
 
செவி வாய் கண் மூக்கு உடல் என்று பஞ்ச இந்திரியங்களும்
சிவந்ததீ     பூமி காற்று(கால்) நீர்     வானம் என்னும்   பூதங்களால் ஆன தேகமும்
இடைவிடாமல் பெருமானை சிந்திப்பதற்கான பக்தியும்
அந்த பக்தி வளரக்காரனமாக இருக்கிர  அக்னிஹோத்திரம் போன்ற வேள்விகளும்
பக்தியை வளர்க்கக்கூடிஅய் விவேகமும் தர்மமும்
இயல்வு என்பரே....சாதனங்கள் என்று சொல்கிறார்களே  இது தகுதியோ?
 
 
 
ஆபத்து நேரிடும்போது, தானே வந்து பாதுகாப்பவனன்றோ எம்பெருமான் என்னவேண்டி ஏனமாய் நின்றாற்கு என்கிறார்
  மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாய்த் திருவவதரித்து அரியன செய்ததெல்லாம் அடியார்க்கன்றோ?.