Friday, December 6, 2013

மண் அளந்தமால் +கருங்கடலே என் நோற்றாய்!

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு, உறிவெண்ணெய்
தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை - ஊன்றி,
பொருதுடைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும்,
மருதிடைபோய் மண்ணளந்த மால்.
 
இப்பாடலுக்கு  சரியாக  விளக்கம் அறிய இயலவில்லை/...முழுதும் அறிந்து  இடுவதற்கு அரங்கன் அருள் செய்யவேண்டும்
 
 
்  தொடர்வது  இந்தப்பாசுரம்
 
 
 
மாலுங் கருங்கடலே என்நோற்றாய், வையகமுண்
டாலின் இலைத்துயின்ற ஆழியான், - கோலக்
கருமேனிச் செங்கண்மால் கண்படையுள், என்றும்
திருமேனி நீதீண்டப் பெற்று.

வையகம்
-
இவ்வுலகத்தை யெல்லாம்
உண்டு
-
(பிரளயம் கொள்ளாதபடி) திருவயிற்றினுள்ளே வைத்து
ஆலின் இலை
-
ஆலந்தளிரிலே
துயின்ற
-
சயனித்துக் கொண்டவனும்
ஆழியான்
-
திருவாழியை யுடையவனும்
கோலம் கரு மேனி
-
அழகிய கறுத்த திருமேனியையுடையவனும்
செம் கண்
-
செந்தாமரைக் கண்ணனுமான
மால்
-
எம்பெருமான்
கண்படையுள்
-
உறங்குகையில்
என்றும்
-
எப்போதும்
திருமேனி
-
அவனுடைய திருமேனியை
தீண்ட பெற்று
-
ஸ்பர்சிக்கப்பெற்று
மாலும்
-
(அந்த ஸ்பர்ச ஸுகத்தினால்) மயங்கிக்கிடக்கிற
கரு கடலே
-
கரிய ஸமுத்ரமே!
நீ என் நோற்றாய்
-
(இந்தப் பாக்கியம் உனக்குக் கிடைக்குமாறு) நீ என்ன நோன்பு நோற்றாயோ?
 
நீலக்கடலும் மால் பள்ளி கொள்வதால் கருங்கடல் ஆனதுபோலும்.. கம்பராமாயணத்திலும்  ஒரு பாடலில் கருங்கடலில்  பள்ளிகொண்டு என்ற சொல் வரும் இன்னமும் சரியாக அதனி நினைவுபடுத்தி சொல்லவேண்டும்.
 
கடலை நோக்கி  அது செய்த பாக்கியம் என்ன என்று  கேட்கிறார் ஆழ்வார் பெருமான்..  அழகிய பாடல் இது.

7 comments:

  1. மிகவும் அருமையான பாசுரம்...

    பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. இந்த பாசுரத்திலே பூமியை அளந்தவனே,பூதனயிடமிருந்து நஞ்சு உண்டவனே,வெண்ணையை திருடி, உண்டவனே,குவளைய யானையை கொன்றவனே,கொக்கின் வாயை பிளந்தவனே,மருத மரங்கள் இடையிலே தவழ்ந்தவனே என திருமால் செய்த லீலைகளை பற்றி சொல்லுகிற ஆழ்வார் தான் இதையெல்லாம் காண பாக்கியம் சைய்யவில்லையே என ஆதங்கபடுகிறார்.
    அடுத்த பாசுரத்தில் அரவணையில் சயனித்து கொண்டுள்ள பகவானை கருங்கடல் தொடும் பாக்கியத்தை பற்றி வியக்கிறார்
    அருமையாக சொல்லி உள்ளீர்கள்.

    ReplyDelete
  3. Thanks Kp sir.. kalyanam endru sutruvathaal ingku paasuram ezutha iyalavillai serthu sikkiramaa pootutuven.
    DD thanks ungalukkum ungalalathaan valaicharam poy paarththeen

    ReplyDelete
  4. இவற்றைப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமைக்கு நன்றி

    ReplyDelete
  5. நன்றி . இப்போது தான் பார்க்க கிடைத்தது உங்கள் பதிவு நன்றி
    தொடருங்கள் தொடர்கிறேன் அம்மா

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள். நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா எனும் நாமம்

    ReplyDelete
  7. திருமாலின் லீலைகளை பேசும் பாசுரமும். அவற்றிற்கு KParthasarathi ன் விளக்கமும் அருமை... கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete