| நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மை ஆகக்கருதுவர் ஆதலின் அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே! பொருள்.. நான்கு வேதம் கற்றவர்கள் என்னை உபயோகம் இல்லாதவனாகக்கருதுவர் ஆனால் அன்னையாக அப்பனாக என்னை ஆண்டிடும் தன்மைகொண்ட சடகோபனே என் நம்பி அதாவது என் பெருமான்! | |
Friday, November 8, 2013
சடகோபன் என் நம்பியே!
Thursday, November 7, 2013
அடியேன் பெற்ற நன்மையே!
திரி தந்தாகிலும் தேவர்பிரானுடை
கரிய கோலத்திரு உருவம் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர்நம்பிக்காள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மைக்கே
3வது பாசுரத்தில் தேவபிரானைக்கண்டதாய் சொல்கிறார் பாருங்கள்! தேவு மற்று அறியேன் என்றார் முந்தையப்பாடலில். இந்தப்பாடலில் எங்கே திரிந்தாலும் தேவர்களின் பிரானின் கரிய கோலத்திரு உருவைக்காண்பாராம்! குரு பக்தி இருக்கிறவனை அண்ணல் கைவிடுவாரா காட்சி அளிக்கத்தான் செய்வார். நம்மாழ்வாருக்கு உரியவனாய் இருப்பதால் அவர் பெற்ற நன்மை இதுதான்!
பாடலின் உட்பொருள் மிக ஆழமானது.அனுபவித்துப்பின் விளக்கவேண்டும்.
Wednesday, November 6, 2013
பாவின் இன்னிசை பாடித்திரிவனே!
மதுரகவி ஆழ்வார் இயற்றிய இரண்டாம் பாடல் இன்று
அந்தாதி வரிசையில் பாடல்கள் அமைந்துள்ளன. முதல்பாடலின் கடைசி சொல் நாவுக்கே என முடிந்தது இப்பாடல் அந்த சொல்லை முதலில் கொண்டு தொடங்குகிறது.
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் திருவடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித்திரிவனே!
எனது நாவினால் நம்மாழ்வாரைப்பற்றிப்பேசி (நவிலுதல்=உரைத்தல்) மகிழ்ச்சியை அடைந்தேன் அவனது பொன்னான திருவடியைப்பற்றினேன்
உண்மையில் வேறு தெய்வம் ஏதும் நானறியேன் குருகூர்நம்பியின் பாசுரங்களை இன்னிசையுடன் பாடித்திரிவேனே!
குருவே தனக்கு தெய்வம் என்கிறார் ஆழ்வார் இப்பாடலில். அவரைப்பற்றி பேசுதல் மகிழ்ச்சியாம் அவரது பாக்களை இசைபடப்பாடித்திரிதலை பெருமைபட கூறுகிறார்!

Monday, November 4, 2013
அமுதூறும் என் நாவுக்கே!!
மதுரகவி ஆழ்வார் என்பவர் மட்டும் ஆண்டவனைப் பாடாமல் தம் ஆச்சாரியரான நம்மாழ்வாரைப் போற்றிக் கொண்டாடி ஒரேயொரு பதிகம் பாடித் தாமும் ஆழ்வாராகவே ஆகிவிட்டார்.
இவர் நம்மாழ்வாரைத் தவிர வேறு எவரையும் அறியாதவர்:அவரது பேரருள் பெற்ற உண்மைச் சீடர்;உலகில் ஆசாரிய பக்தி எப்படி இருக்கவேண்டும் என்பதையும், ஆசாரியன் செய்யும் பேருபகாரத்தையும் எடுத்துக் கூறியவர். பகவானால் செய்யமுடியாததையும் ஆசாரியர் செய்து காட்டக்கூடியவர் என்பதை அறுதி இட்டவர். மதுர கவிகளின் பாடல்கள் மதுரமானவை.
நம்மாழ்வாரின் பெருமைகளை மதுரகவிகள் அருளிய கண்ணி நுண் சிறுத்தாம்பைக் கொண்டே அறியமுடியும். மதுரகவிகள் தம் பிரபந்தத்தில் நம்மாழ்வாரை ஒன்பது முறை நம்பி என்று கூறியுள்ளார். திருவாய்மொழி ஸேவிக்கும் முன்பு கண்ணி நுண் சிறுத்தாம்பு ஸேவிப்பது வழக்கம். நாதமுனிகளுக்கு நம்மாழ்வாரைப் பெற்றுக் கொடுத்ததும் கண்ணி நுண்சிறுத்தாம்பே!
முதல் பாடலைப்பார்க்கலாம்.
கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என்னப்பனில்
நண்ணித்தென்குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே!
அவரைப் பற்றிக் கொஞ்சம் அறிந்து கொள்வோம்.
தென்தமிழ் நாட்டில் ஸ்ரீவைகுண்டத்தின் அருகே விளங்கும் திருத்தலம் ஆழ்வார் திருநகரி ஆகும். ஆழ்வார் பாடல் பெற்றதால் இது திவ்வியதேசமும் ஆகும். இவ்வூருக்குள் அவதரித்து அசையாப் பிண்டமாய் இருந்து பரம்பொருளாம் ஸ்ரீமந் நாராயணனின் நினைவிலேயே நிறைந்திருந்தவரே நம்மாழ்வார். பிறந்தவுடனே இப்பிறவி பற்றிய தொடர்பையும் சிந்தனையையும் கொடுத்துப் பிறப்பு- இறப்புச் சுழலில் நம்மைத் தள்ளுவது சடம் என்னும் வாயு. அந்த வாயுவைக் கோபித்து விலக்கியவர் நம்மாழ்வார். அதனால் சடகோபர் என்றும் போற்றப்படுகிறார்.
இந்த நம்மாழ்வாருக்குச் சீடராகி, இவரது புகழை மட்டுமே பாடித் தாமும் ஓர் ஆழ்வாராக ஏற்றம் பெற்றவரே மதுரகவியாழ்வார் ஆவார். மதுரகவியாழ்வார் காலத்தால் நம்மாழ்வாருக்கு மூத்தவர். ஆழ்வார் திருநகரி அருகில் உள்ள திருக்கோளூரில் அவதரித்தவர்.
அந்தணர் குலத்தில் தோன்றிய மதுரகவியாழ்வார், வேதசாஸ்திரங்களைக் கற்று இறைபக்தி மேலிட்ட நிலையில் ஸ்ரீகிருஷ்ண பகவானை நேரில் தரிசிக்க விரும்பி வடதேச யாத்திரை சென்றபோது, தேற்குத் திசையில் ஒரு ஜோதிப்பிழம்பு தென்பட்டது. பல நாட்கள் அவ்வாறு தென்பட்டதால், தமது வடதேச யாத்திரையைக் கைவிட்டு, அச்சோதியை அருகில் சென்று பார்க்கும் ஆவலில் மீண்டும் தென்திசையில் நடக்கத் தொடங்கினார்.
அச்சோதியானது ஆழ்வார் திருநகரியில் மறைந்து விடவும், அவ்வூரில் ஏதேனும் விஷயம் உள்ளதா என்று அவ்வூராரிடம் கேட்டார். அவ்வூர்த் திருக்கோயிலின்கண் உள்ள புளியமரத்துப் பொந்தில் யோக நிலையில் வீற்றிருக்கும் நம்மாழ்வாரைப் பற்றி அறிந்தார். ஆர்வமுடன் சென்று நம்மாழ்வாரை வணங்கினார்.
எதுவும் பேசாதிருந்த நம்மாழ்வாரின் அருகில் சென்று, செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்? என்று வினவ, யோக நிலையிலிருந்த நம்மாழ்வார் அது அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்று பதில் கூறிவிட்டு மீண்டும் யோக நிலைக்குச் சென்று விட்டாராம்.
இவ்வுலகில் பிறக்கும் ஜீவாத்மாக்கள் அனுபவிப்பது என்ன? என்பது மதுரகவியாழ்வாரின் கேள்வி.
ஜீவாத்மாக்கள் இப்பிரபஞ்சத்திலுள்ள பொருள்களின் போகத்திலேயே திளைத்து இந்தச் சம்சார வாழ்வில் உழன்று கொண்டிருக்கும் என்பதே நம்மாழ்வாரின் பதில்.
மிக உயர்ந்த தத்துவத்தை மிக எளிமையாக விளக்கிக் கூறிய நம்மாழ்வாரையே அதுமுதல் தம்முடைய குருவாக ஏற்றுக் கொண்டார் மதுரகவியாழ்வார்
இவர் நம்மாழ்வாரைத் தவிர வேறு எவரையும் அறியாதவர்:அவரது பேரருள் பெற்ற உண்மைச் சீடர்;உலகில் ஆசாரிய பக்தி எப்படி இருக்கவேண்டும் என்பதையும், ஆசாரியன் செய்யும் பேருபகாரத்தையும் எடுத்துக் கூறியவர். பகவானால் செய்யமுடியாததையும் ஆசாரியர் செய்து காட்டக்கூடியவர் என்பதை அறுதி இட்டவர். மதுர கவிகளின் பாடல்கள் மதுரமானவை.
நம்மாழ்வாரின் பெருமைகளை மதுரகவிகள் அருளிய கண்ணி நுண் சிறுத்தாம்பைக் கொண்டே அறியமுடியும். மதுரகவிகள் தம் பிரபந்தத்தில் நம்மாழ்வாரை ஒன்பது முறை நம்பி என்று கூறியுள்ளார். திருவாய்மொழி ஸேவிக்கும் முன்பு கண்ணி நுண் சிறுத்தாம்பு ஸேவிப்பது வழக்கம். நாதமுனிகளுக்கு நம்மாழ்வாரைப் பெற்றுக் கொடுத்ததும் கண்ணி நுண்சிறுத்தாம்பே!
முதல் பாடலைப்பார்க்கலாம்.
கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என்னப்பனில்
நண்ணித்தென்குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே!
மிகவும் நெருக்கமான முடிச்சுகள் கொண்ட, உறுத்தும்படியான கயிறு கொண்டு யசோதை கண்ணனை உரலில் கட்டினாள். அவ்விதம் அவள் தன்னைக் கட்டும்படியாகத் தன்னை அந்த ஸர்வேச்வரன் ஆக்கிக் கொண்டான். இப்படியாக அவள் தன்னைக் கட்டும்படியாக, மாயச்செயல்கள் பல நிறைந்தவனான கண்ணன் செய்து கொண்டான். என்னே அவன் இரக்கம்! இத்தனை எளிமையுடையவனாக உள்ள கண்ணனை அண்டி, அவன் திருநாமத்தைக் கூறுவதைக் காட்டிலும் எனக்கு (மதுரகவி ஆழ்வார்) வேறு ஒன்று மிகவும் இனிமை அளிப்பதாக உள்ளது! ஆழ்வார் திருநகரி என்னும் தென்குருகூருக்குத் தலைவரான நம்மாழ்வார் என்று ஆழ்வாரின் திருநாமம் கூறும்போது, ஸர்வேச்வரனின் திருநாமத்தைக் கூறுவதைக் காட்டிலும் மிகவும் இனிமையாக உள்ளது. இப்படிப்பட்ட அமிர்தம் என் நாவிற்குக் கிட்டியது.
என் அமுதினைக்கண்ட கண்கள்!
கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணை
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக்காணாவே!
மேக வண்ணன் ஆயர்பாடியில் கோ எனும் பசுக்களை ரட்சித்தவன்
வெண்ணையை உண்ட திருவாய் உடையவன் என் உள்ளத்தைக்கவர்ந்தவன்
தேவர்களின் தலிவனான அழகிய நகரின் அரங்கப்பெருமான் அவன் என் அமிர்தம் அவனைகக்ண்ட கண்கள் மற்றொன்றினைக்காணாது.காணத்தான் முடியுமோ!!!
பாணர்பெருமானுக்கு நெஞ்சும் கண்ணும் நிறைகிறது இப்பாடலுடன்..ஆண்டாளைப்போல இவரையும் தன்னோடு ஐக்கியப்படுத்திக்கொள்கிறான் அரங்கன்
அரங்கன் கோவிலில் நுழைவாயிலிலேயே இடப்பக்கம். ஆண்டாளுக்கு சந்நிதி வலப்பக்கம் அவளுக்கு எதிர்சந்நிதியில் திருப்பாணாழ்வார் நமக்கு அருள்தர காத்திருக்கிறார்.
திருப்பாணாழ்வாருக்கான வாழித்திருநாமமுடன்
திவ்யபிரபந்தம் பகுதியின் முதல் பத்துபாடல்களாய் இந்த அரங்கப்ரியா தேர்ந்தெடுத்த பாசுர வரிசை நிறைவுபெறுகிறது.அடுத்து மதுரகவியை கொண்டுவர ஆர்வம்!
உம்பர் தொழு மெய் ஞானத்து உறையூரான் வாழியே
உரோகிணி நாள் கார்த்திகையில் உதித்த வள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனி தோளில் வந்த பிரான் வாழியே
மலர்கண்ணை வேறொன்றில் வையாதான் வாழியே
அம்புலியில் மதிலரங்கர் அகம் புகுந்தான் வாழியே
அமலனாதிப்பிரான் பத்துமருளினான் வாழியே
செம்பொன் அடி முடியளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகத்தலத்தில் வாழியே!
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்!

நீலமேனி ஐயோ!
ஆல மாமரத்தின் கீழ் ஓர் பாலகனாய் ஞாலம் ஏழும் உண்டான்
அரங்கத்து அரவின் அணையான்
கோலமாமணி ஆரமும் முத்துத்தாமமும் முடிவு இல்லதுஓர் எழில்
நீலமேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே!
பெரிய ஆலமரமாம் அதன் கீழ் ஓரு சிறுவனாய் அமர்ந்தவன் உலகேழையும் வாயில் கொண்டவன் அவனே அரங்கத்து அரவணையில் இருப்பவன் அவனது அழகுமிகு ரத்தினமணி மாலையும் முத்து மாலையும் எல்லையற்ற எழில் கொண்டது. அந்த நீலமேனி இருக்கிறதே ஐயோ என்ன சொல்வதுபோங்கள் என் நெஞ்சை நிறைத்து விட்டதே!
ஆழ்வார் பெருமான் இங்கே நெஞ்சத்தவிப்பில் அதன் போதையில் ஐயோ என்பதாக மங்கலமாய் அருள்கிறார்
என்னைப்பேதைமை செய்தனவே!
பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிபிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரியவாகி புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்
பெரியவாய கண்கள் என்னைப்பேதைமை செய்தனவே!
இப்பாடலில் நரசிம்ம அவதாரம் முதல் வரியில் வருகிறது. ஆண்டாளும் மாரி மலைமுழஞ்சில் என்ரபாசுரத்தில் நரசிம்மனை நினைத்துக்கொள்வாள்.
அவன் எங்கும் இருப்பவன் அல்லவா? அவனைத்தவிர்ந்து எதனைக்கூறல் இயலும்?
பிரஹலாதனின் தந்தையின் உடலைக்கீறியவன் அமரர்க்கு மிகவும் அரியவனான ஆதிமூர்த்தி. அவன் தான் அரங்கத்து அமலன் அவன் முகத்தில் கரிய நிறத்தில் புடைத்துப்பரந்து ஒளிவீசி சிவந்த வரிகள் ஓடும் அந்தப்பெரியத்திருவிழிகளைக்காணும்போதே எனக்குபேதைமையாக இருக்கிறது. ஆம் நேத்ர தரிசனம் அல்லவோ கண்டுவிட்டார் பாணர் பெருமான்! அந்தப்பெரியவிழிகளில் இவர் புகுந்துவிட்டாராம் பின்னர் பேசவும் வருமோ மனமே பேதைமை பிடித்தார்போலாகாதோ!

Subscribe to:
Posts (Atom)