Tuesday, December 3, 2013

பழுதே பலபகலும் போயின வென்று.....

 
பழுதே பலபகலும் போயினவென்று , அஞ்சி
அழுதேன் அரவணைமேல் கண்டு - தொழுதேன்,
கடலோதம் காலலைப்பக் கண்வளரும், செங்கண்
அடலோத வண்ணர் அடி.
 
 
 
பழுதே  பலபகலும் போயின.....வீணாய்ப்போனதே  என் நாளெல்லாம் என  புலம்புகிறார் ஆழ்வார் பெருமான். அலைவீசும் கடல்மீது  திருவடி  பதித்து  அறிதுயில் கொள்ளும் செங்கண் உடைய 
அடலோத வண்ணர்= ஓதம் என்று கடலுக்கும் அலைக்கும் பெயர்; இவ்விடத்தில்  அலை என்னும் பொருள்  திருமேனியிலே பரவுகின்றலாவண்ய தரங்கங்களைச் சொன்னபடி. அநுபவிக்க வருமவர்களை அடர்த்துத் தள்ளுகிற லாவண்ய தரங்கங்களோடு கூடிய திருமேனியையுடையவர் என்று கொள்ளவேண்டும் என  பாசுரத்திற்குப்பெரியோர் விளக்கம் கூறுகின்றனர்.
அந்தப்பெருமானின் திருவடியை  அஞ்சி அழுதநிலையிலிருந்தவர்  கை தொழுதாராம்!
 
ஆறாம்பாட்டில் “ ஒன்று மறந்தறியேன் ஓதநீர்வண்ணனை நான்” என்றும் “அன்று கருவரங்கத்துக்கிடந்து கைதொழுதேன் கண்டேன்” என்றும் கர்ப்பவாசமிருந்தே    தொழுததாக  சொல்லிக்கொண்ட இதே  ஆழ்வார்  இங்கே  பழுதே பலபகலும் போயினவென்று அழுவதாகச் சொல்லிக்கொள்வதேன் என்பதைஇப்பிறவிக்கு முன்னே   எனகொள்ளவேண்டும் 

4 comments:

  1. இப்பிறவியில் கிடைத்த ஞானத்தாலும் எம்பெருமானின் அளவற்ற சௌந்தரியத்தை தொழுது களிக்கும் பேறினாலும் கடந்த பிறவிகள் வீணாகினவே என்று மனம் நொந்து அஞ்சி கிடந்ததை இந்த பாசுரத்தில். சொல்கிறார். அதை மிகவும் அழகாக விளக்கி உள்ளீர்கள்

    ReplyDelete
  2. மிகவும் அருமையான விளக்கம்... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. கேபி சாருக்கும் டிடிக்கும் நன்றி மிக

    ReplyDelete
  4. ஆஹா அருட்பா சுவைமிகுந்து உள்ளது ...அருமை ... கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete