Sunday, December 1, 2013

உலகு அளந்த மூர்த்தி உருவே முதல்.

அவர் அவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி,
 இவர் இவர் எம் பெருமான் என்று,
சுவர் மிசை சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகு அளந்த
மூர்த்தி உருவே முதல்
 .
ஆழ்வார் பெருமானின் 14ம் பாசுரம் இது.

அவரவர்கள் தங்கள் தங்கள் மனதிற்கு பட்ட,  அதாவது தாம்அறிந்தவகையில் வணங்குவர்.
இவர் இவர் எம் பெருமான்  என்று அதாவது  மனதிற்குப்பட்ட  உருவங்களை  தேவதைகளை  தெய்வம் என்று  சுவரில்   சார்த்தி அதில் வைத்து என்றெல்லாம்  வணங்குவர்
உலகை அளந்த பெருமானே ஆதிபிரான்( என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்)

உலகளந்த பெருமானை  வணங்காது  ஏதேதோ தெய்வங்களை ஏதேதோ வகையில் தொழுபவர்களைப்பற்றிய ஆழ்வாரின் ஆதங்கம்  பாசுரத்தில்  தெரிகிறது அல்லவா?
 

3 comments:

  1. இந்த பாசுரத்தில் அழ்வாருக்கு திருமாலின் பேருள்ள அதீத பக்தியும்,ஒரு க்ஷணமும் விலகாத லயிப்பும் எம்பெருமானே முதற் கடவுள் என்கிற இடத்தில் அவரின் தீவிரம் புலப்படுகிறது.

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. உலகளந்தவர் என்பதால் அவர்தான் முதன்மை கடவுள் என்பது தெளிவாக தெரிகிறது. கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete