Monday, December 2, 2013

முதல் ஆவார் மூவரே!

முதல் ஆவார் மூவரே அம்மூவருள்ளும்
முதல் ஆவான் மூரி நீர் வண்ணன்  முதல் ஆய
நல்லான் அருள்  அல்லால்  நாம நீர் வையத்து
பல்லார் அருளும் பழுது.

பொய்கைஆழ்வார் பெருமானின் 15வது பிரசுரம்

விளக்கம்

தனக்கென்று உருவம் யாதுமில்லாத இறைவன் படைத்தல் காத்தல் அழித்தல்  எனும் முத்தொழில்களை இயற்றி இந்த உலகினை அழிந்துபடாது நிலைபெறச் செய்வான் எடுக்கும் மூவடிவங்களே அயன் நாரணன் உருத்திரன் என்பவை யாகும். இம்மூவருள்ளும் கருங்கடல் வண்ணனாகிய நாரணன் முதல் ஆவான். நீரினை ஆட்சி செய்து அதனின்று பலவற்றை எழச் செய்யும் திருமாலின் அருளின்றி இந்த அச்சம் மிகுந்த வையகத்தில், ஏனையோர் செய்யக் கூடிய அருளாட்சிகளும் பழுதாய் விழும்.

முரி நீர் என்றால் கடல்
கடல் நிறம் கொண்ட திருமாலே  முதல் ஆய நலலன் என்றும் உறுதிபடப் பேசுகிறார், இந்த ஆழ்வார்

4 comments:

  1. ஆழ்வார் மறுபடியும் திருமாலின் அருள் தவிர மற்றதெல்லாம் பழுது அவனே முதல்வன் என்று இந்த வார்த்தைகளில் வலியுறுத்துகிறார்.
    "முதல் ஆய நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையத்து
    பல்லார் அருளும் பழுது." அப்படி ஒரு மன திண்ணம்.அவரின் மேல் உள்ள பக்தி காரணமாக.

    ReplyDelete
  2. விளக்கம் மிகவும் அருமை...

    நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வலைபக்கத்தின் எந்த மூலைக்கு போனாலும் தங்கள் முகம் தெரிகிறதே.. தாங்கள் ஒளிவீசும் ஞாயிறோ,திங்களோ தரணி போற்றும் செவ்வாய் கோவையோ யாம் அறிகிலேன் கோமானே !!!

      Delete
  3. கேபி சாருக்கும் டி டி அவர்களுக்கும் நன்றி மிக

    ReplyDelete