Wednesday, December 4, 2013

அடியும் படி கடப்பத் தோள் திசைமேல் செல்ல.....

                                       அடியும் படிகடப்பத் தோள்திசைமேல் செல்ல,
முடியும் விசும்பளந் ததென்பர், - வடியுகிரால்
ஈர்ந்தான் இரணியன தாகம், இருஞ்சிறைப்புள்
ஊர்ந்தா னுலகளந்த நான்று



இரணியனுடைய  ஆகம் அதாவது மார்பை  வடி உகிரால்= கூர்மையான நகங்களால் ஈர்ந்தான் அதாவது கிழித்தெறிந்தவனும்  இரு சிறை புள் ஊர்ந்தான் என்றால் இரு சிறகுகளைக்கொண்ட  கருடன் மீது ஏறி நடத்துபவனுமாகிய  பெருமான்,  உலகு அளந்த நாளன்று அடியும் அதாவது  திருவடி
படி கிடப்ப =பூமியை அளந்துகொள்ள  தோள்=திருத்தோள்கள்

திசைமேல் செல்ல.....திக்கெங்கும் வியாபிக்க
முடியும்..கிரீடம்

விசும்பு..மேல் உலகத்தை
அளந்தது/...அ்ளவுபடுத்திக்கொண்டது

பின்னடிகளின் கருத்தையும் ஆழ்ந்து நோக்கினால், இரணியனைப்பிளந்து ப்ரஹ்லாதனுக்கு அருள்செய்தகாலத்திலும், ஸ்ரீகஜேந்திராழ்வானைக் காத்தருளப் பெரியதிருவடியின் மீதேறி அரைகுலையத் தலைகுலைய விரைந்தோடி வந்தகாலத்திலும் நேரில் சேவிக்க  இயலாமல் போனோமே  என்ற ஆதங்கம்   தோன்றும்



்பெரியோர்  கூறிய  விளக்கம்  இது...

 
இரணியனது
-
ஹிரண்யாஸுரனுடய
ஆகம்
-
மார்வை
வடி உகிரால்
-
கூர்மையான நகங்களாலே
ஈர்ந்தான்
-
கிழித்தெறிந்தவனும்
இரு சிறை புன் ஊர்ந்தான்
-
பெரிய சிறகையுடைய கருடனை ஏறிநடத்து பவனுமாகிய எம்பெருமான்
உலகு அளந்த நான்று
-
உலகளந்த காலத்திலே
அடியும்
-
திருவடி
படி கடப்ப
-
பூமியை அளந்துகொள்ள
தோள்
-
திருத்தோள்கள்
திசைமேல் செல்ல
-
திக்குகளிலே வியாபிக்க
முடியும்
-
கிரீடம்
விசும்பு
-
மேலுலகத்தை
அளந்தது
-
அளவுபடுத்திக்கொண்டது

6 comments:

  1. அட்டவணை விளக்கம் மிகவும் அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தொடரட்டும் உங்கள் நற்பணி .வாழ்த்துகள்

    ReplyDelete
  3. அட்டவணை விளக்கம் பெரியோர் ஒருவர் இட்டது கேபி சார் நன்றி அவருக்கே.... டிடிக்கும் நன்றி

    ReplyDelete
  4. நன்றி
    அருமையான விளக்கம்

    ReplyDelete
  5. நன்றி
    அருமையான விளக்கம்

    ReplyDelete
  6. அட்டவணையுடன் விளக்கம் அருளும் பெரியோருக்கும் சகோதரி ஷைலஜா அவர்களுக்கும் நன்றிகள் பல ... கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete