Saturday, October 26, 2013

மந்திபாய் வட வேங்கட மாமலை!

அமலனாதிபிரான் பாசுரங்களில் இன்று மூன்றாவதுநாள்
 மூன்றாம் பாசுரம்.



மந்தி பாய் வடவேங்கட மாமலை  வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவணையான்
அந்திபோல் நிறத்தாடையும் அதன் மேல்
   அயனைப்படைத்ததோர்  எழில்
உந்திமேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே!

சென்ற பாசுரத்தில் அரைச்சிவந்த ஆடைமேல் சிந்தனை சென்றதாகக்குறிப்பிட்ட ஆழ்வார் பெருமான்  இந்தப்பாடலில்
 அண்ணலின் உந்திக்குத்தாவுகிறார்.தாவுதல் குரங்கின் இயல்பு.
அதிலும் மந்திகள்
என்பதில்  பெண்குரங்குகள் என்றது  பெருமாளை  ஏகபுருஷனாக  மனதில்  நினைத்து  அனைவரும்  பெண்களாக   மனத்தளவில் அவனோடு ஐக்கியமாவதால்  மந்தி பாய் என ஆரம்பிக்கிறார் ஆழ்வார். மலைப்பிரதேசத்தில் அதாவது உயர்ந்த இடத்தில்தான்  மந்திகள் தாவிக்கொண்டிருக்கும் . அப்படிப்பட்ட  வடமலை-தமிழகத்திற்கு வடக்குப்புறமான  திருவேங்கடவனின் மலையில்  தேவர்கள்  வந்தனம்  செய்துகொண்டிருக்கிறார்கள்.அங்கே நின்றான்  அரங்கத்தில்
அரவில் துயில்கொள்கிறான் அவனது  அந்திநேரச்சிவப்பிலான ஆடையும் அதன்நடுவே பிரும்மனைப்படைத்த  அழகுமிகு  உந்தி எனும் தொப்புள்
 மேல் என் உள்ளம் சென்றதே் ! உள்ளத்தில்
இன்னுயிர்  ஆக இருப்பவனே!

 

3 comments:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை…தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. நன்றி திரு டிடி... நீங்க தெரிவிக்காவிட்டால் நான் காண வாய்ப்பில்லை.. மேலும் இந்தவலைப்பூவினை மேன்படுத்த உங்கள் உதவியும் தேவை!

    ReplyDelete
  3. இன்றுதான் தங்கள் வலைபதிவு வந்தேன் செந்தேன் அள்ளி பருகினேன் நன்றி !! கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete