Sunday, October 27, 2013

சதுர மாமதில்!

சதுரமாமதில்சூழ் இலங்கைக்கு இறைவன் தலைபத்து
உதிர ஓட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓதவண்ணன்
மதுரமா வண்டு பாட மாம்யில் ஆட
   அரங்கத்து அம்மான் திரு வயிற்று
உதரபந்தம் என் உள்ளத்தில் நின்று உலாகின்றதே!



சதுரம் என்றால்  நான்குபக்கம்  என்றுமட்டுமல்ல சாமர்த்தியம், திறமை, நேர்த்தி என்ற இன்னொரு பொருளும் உண்டு!
சதுர மா மதிள் = சாமார்த்தியமாகக் கட்டப்பட்ட  சிறந்த மதில்கள்

சதுரமான வடிவில் உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட இலங்கை நகரம்; அதன் தலைவனாக(இறைவன் என்பார்கள் அரசனை கம்பன்  பலமுறை இச்சொல்லை  பயன்படுத்தி இருப்பான்) திகழ்ந்த ராவணன்; அவன் வீரனாக இருந்தாலும் அதர்ம செயல்களில் ஈடுபட்டதால் ராமனின் கோபத்திற்கு ஆளானான். யுத்தத்தில் ராமன் ராவணனை ஓடவிட்டுத் தொலைத்தான். வீரனான அந்த ராமன் காண்பதற்கு அழகிய கடல் வண்ணன்.

. இந்த அரங்க நகருள்  பெரிய அல்லது சிறந்தவண்டுகள் இனிமையாகப் பாடுகின்றன. சிறந்த மயில்கள் அந்தப் பாட்டிற்கு ஏற்றார் போல ஆடுகின்றன. இன்று அந்த அரங்கனின் (ராமனின் கம்பீரமான) அழகு என் நெஞ்சத்தில் நிலையாக நின்று, மெல்ல அழகாக பவனி வருகின்றது. இந்த அரங்கனின் திருவயிற்றைச் சுற்றி உள்ள உதர பந்தம் எனில் தாமோதரனான(யசோதை  கயிற்றினால்; வயிற்றில் கட்டியபோது உண்டான தழும்பு) அவன் வயிற்றுத்தழும்பு எனவும் கொள்ளலாம்.இன்றும் அரங்கனின் திருமஞ்சனத்தின்ப்போது  இதைக்கண்டு சேவிக்கலாம்.  அது அப்படியே என் உள்ளத்தில் உலாவுகின்றது.

3 comments:

  1. வாங்க டிடி...வலைப்பூவினை மற்றவர் பார்க்க ஏதும் வழி செய்யுங்களேன் நன்றி மிக

    ReplyDelete
  2. சதுரம் என்றால் நான்குபக்கம் என்றுமட்டுமல்ல சாமர்த்தியம், திறமை, நேர்த்தி என்ற இன்னொரு பொருளும் உண்டு! - புதியன அறிந்தேன் ...மகிழ்ச்சி !!! கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete