Tuesday, October 29, 2013

அஞ்சிறைய வண்டு வாழ் பொழில்


துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய் அப்பன்
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம்
 எழுமால்வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக்கொண்டதே!

வெண்நிலாதுண்டினை  தலையில் கொண்ட சிவபெருமானின்  துயரைக்களைந்தவன்  அழகிய  சிறகுகளைக்கொண்ட வண்டுகள்  வாழும் சோலை சூழ்ந்த  அரங்கநகரை ஆளும் தலைவன்  தேவலோகம்  புற லோகம்  பூமி எழாமல் அழுந்திக்கிடக்கும்  மலைகளை முழுவதும்  உண்ட அந்த  கண்டமானதைக்கண்டீர்களா அது அடியேனை  உய்யக்கொண்டது என்கிறார் ஆழ்வார் பெருமான். இந்த உலக வாழ்க்கையில்  நான் சிக்காமல் என்னைக்காப்பாறியதே  என்பதான பொருளாகக்கொள்ளலாம்.

பெருமானின் கழுத்தில் பதிந்த  பார்வையாக இந்தப்பாடல் அமைந்துள்ளது.
 

3 comments:

  1. உணர வேண்டிய விளக்கம்... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அரங்கனின் பெருமையையும் அவனால் பகிரண்டங்களை விழுங்கக்கூடிய திறமையையும் பார்த்து பிரமிப்பினால் பாடிய பாசுரம்.உள்ளர்த்தமும் கூறி மனதில் பதியும்படி சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete
  3. அஞ்சிறை வண்டு அதுவும் தொழும் எம்பிரான் பெருமை கண்டு... கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete