Wednesday, October 30, 2013

மாயனார் செய்யவாய்!

கையின் ஆர் கரிசங்கு அனலாழியர் நீள் வரைபோல்
மெய்யனார் துளபவிரையார் கமழ் நீள் முடி எம்
ஐயனார் அணியரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார்
செய்யவாய் ஐயோ என்நைச் சிந்தை கவந்ததுவே


பாணரின் இப்பாசுரத்தில் ஆண்டாளைப்போல  அண்ணலின் அதரம்  கவரப்படுவதாக இருக்கிறது..திருப்பவளச்செவ்வாய் என்றாள்  ஆண்டாள். அதனை விரும்பி வேண்டியவள்.

திருக்கரத்தில்  அழகிய சங்காம்  அனல் வீசும் ஆழியாம்  மலைபோல மேனியாம்  நறுமணம் வீசும்  நீள் முடியாம்  ஐயனாம்  அழகிய அரங்கத்தில் வசி்ப்பவனாம்  அரவின் அணைமீது  இருப்பவனாம்  வினோதம் செய்யும் மாயனாம்  அவனது சிவந்த  வாய்..என்றவருக்கு அங்கேயே  மனம் தங்கிவிட  வார்த்தை  வரவில்லையாம் ஐயோ என  ஆனந்தப்புலம்பல்  எழுகிறது  பெருமானின்   சிவந்த அதரம் அவரது சிந்தனையைக்கவர்ந்து  விட்டதாம்!  நம்மை இந்தப்ப்பாசுரம் கவர்ந்ததுபோல!
 

5 comments:

  1. அரங்கனை கண்ட திருப்பாணாழ்வார் தன் மனநிலையை பாதாதி கேச வர்ணனையின் மூலம் வெளிபடுத்தும் பத்து பாசுரங்களை பதிவில் ஒவ்வொன்றாக இட்டு எங்களை பரவசத்தில் மூழ்க செய்கிறீர்களே.
    .உங்களுக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி கேபி சார்

      தீபாவளிக்கு ஊரில் இல்லை அதனால் உடன் மடலிட இயலவில்லை

      Delete
  2. வார்த்தை வரவில்லை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மிக்க நன்றி டிடி சரி செய்துவிட்டேன் இப்போது சரியா இருக்கா சொல்லுங்க...தீபாவளி மும்முரம் நேரமே கிடைக்கவில்லை வெளியூர்வேறு சென்றதால் உங்க பொன்னான கருத்தை வலிப்பூவில் செய்ய சொன்ன மாற்றத்தை இப்போதுதான் ் கவனித்தேன்

    ReplyDelete
  4. திண்டுக்கல் தனபாலன் சார் கருத்து மிக சரியே .. என்னைப் போன்ற கண் தெரியாத கபோதிகளுக்கு Word verification- மிகுந்த சிரமத்தை கொடுக்கிறது ... கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete