Tuesday, November 12, 2013

ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர்..

அருள் கொண்டாடும்* அடியவர் இன்புற*
அருளினான்* அவ்வருமறையின் பொருள்*
அருள் கொண்டு* ஆயிரம் இன்தமிழ் பாடினான்*
அருள் கண்டீர்* இவ்வுலகினில் மிக்கதே*




விளக்கம்:

பரம பக்தர்களான அடியவர்கள் இன்புறுவதற்காக, கருணையே வடிவெடுத்தவனான எம்பெருமான், வேதார்த்தங்களை வெளியிட்டுஅருளினான்(வேதமறிந்த அதிகாரிகள் மட்டும் உய்யும் படி ஆயிற்று). இப்படி வேத ரகஸ்யங்களை வெளியிட்டு அருளின எம்பெருமானுடைய கிருபையைக் காட்டிலும், அவனுடைய கிருபையாலே சுவாமி நம்மாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய அழகிய இனிய தமிழ் மொழியில் அமைந்த திருவாய்மொழியோ அனைவரும் உய்வதற்காக அருளிச்செய்யப்பட்ட பிரபந்தம் ஆன படியாலே, அந்த கிருபை ஒன்று மட்டுமே இவ்வுலகினில் பெரியதாக விளங்குகிறது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்

3 comments:

  1. உண்மைதான்.வேதமறிந்த சிலருக்கு அல்லாமல் எல்லோருக்கும் எளிதில் புரியக்கூடிய தமிழில் அருளி செய்த நம்மாழ்வாரின் பாசுரங்கள் சிறந்த பொக்கிஷம்

    ReplyDelete
  2. வழக்கமாய் வந்து நற்கருத்திடும் கேபி சார்க்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. நம்மாழ்வாரின் பாசுரங்கள் பக்தி வளர்க்கும் பா ஸ்வரங்கள் ... கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete