Friday, November 8, 2013

சடகோபன் என் நம்பியே!

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக்கருதுவர் ஆதலின்
அன்னையாய் அத்தனாய் என்னை     ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே!

பொருள்..

நான்கு வேதம்  கற்றவர்கள் என்னை உபயோகம் இல்லாதவனாகக்கருதுவர்  ஆனால் அன்னையாக அப்பனாக என்னை ஆண்டிடும்  தன்மைகொண்ட சடகோபனே  என் நம்பி அதாவது என் பெருமான்!
Worthy and graceful scholars of the four Vedas had found me worthless in my ways. But father, mother both-in-one, Satakopa now rules my days.

4 comments:

  1. வேதங்களை கற்ற்வர்களான நான்மறையாளர்கள் இவரைப் புன்மையே வடிவெடுத்தவர் என்று கருதினாலும், இவரோ தனக்கு நம்மாழ்வார்தான் சகல உறவு என்று கருதுகிறார். நம்மாழ்வாரிடம் உள்ள அவருடைய பரிபூரண பக்தியையும், அவரால் தன்னை கடைதேற்ற முடியும் உள்ள நம்பிக்கையும் வெளிப்படுகிறது

    ReplyDelete
  2. மிக்க நன்றி அழகான விளக்கம் அளித்த திரு பார்த்தசாரதி அவர்களுக்கும் படிப்பத்ற்கு விருந்தென்ற un known அவர்களுக்கும்

    ReplyDelete
  3. அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
    தன்மையான் சடகோபன் என் நம்பியே!
    கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete