Monday, November 4, 2013

நீலமேனி ஐயோ!


 ஆல மாமரத்தின் கீழ் ஓர் பாலகனாய்  ஞாலம் ஏழும் உண்டான்
  அரங்கத்து அரவின் அணையான்
கோலமாமணி ஆரமும் முத்துத்தாமமும்   முடிவு இல்லதுஓர் எழில்
நீலமேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே!


பெரிய ஆலமரமாம் அதன்  கீழ்  ஓரு சிறுவனாய் அமர்ந்தவன்  உலகேழையும் வாயில்  கொண்டவன் அவனே அரங்கத்து அரவணையில்  இருப்பவன்  அவனது  அழகுமிகு  ரத்தினமணி மாலையும்  முத்து மாலையும்  எல்லையற்ற எழில் கொண்டது.  அந்த  நீலமேனி   இருக்கிறதே  ஐயோ என்ன சொல்வதுபோங்கள் என் நெஞ்சை   நிறைத்து விட்டதே!

ஆழ்வார் பெருமான் இங்கே  நெஞ்சத்தவிப்பில்  அதன் போதையில் ஐயோ என்பதாக மங்கலமாய் அருள்கிறார்

1 comment:

  1. நீல மேனியின் எழில் கண்டு உரைக்க வார்த்தை இன்றி ஐயோ என்று வியக்கிறார் ....கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete