Thursday, November 21, 2013

நெறி வாசல் தானேயாய் நின்றானை...

நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து
பொறி வாசல் போர் கதவம் சார்த்தி அறிவானாம்
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த
ஆல் அமர் கண்டத்து அரன்
 
 
பொய்கை ஆழ்வார் பாசுரம்  4
 
விஷம் கொண்ட கழுத்துடைய  அரனுக்குத்தெரியுமாம்  என  ஆழ்வார்  ஆரம்பிப்பதாக கொள்ளவேண்டும்  அதாவது  எம் பெருமான்   நமது ஐந்து பொறிகளின் (அவஸ்தை) போர் மூளும் கதவை அடைத்து   தானே உபாயமும் உபேயமுமாக இருக்கிறவனை  அன்று ஆலமரத்தின் கீழ்  நான்கு ரிஷிகளுக்கு(அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷர் மார்க்கண்டேயர்) தர்மோபதேசம்  செய்தவனை   சிவன் அறிவானாம்( என்று  இலேசான பரிகாசத்வனியுடன் சொல்கிறார்)

3 comments:

  1. நீலகண்ட சிவ பெருமான் தன் ஐம்புலன்களை அடக்கியும் திருமாலை அறிய முடியவில்லை. திருமாலின் அருள் இல்லாமல் அவரை காணமுடியாது என்பதாகவும் அர்த்தம் கொள்ளலாம்.

    ReplyDelete
  2. ஆமாம் கேபி சார் நீங்க சொல்லும் அர்த்தமும் சரிதான்.நன்றி மிக

    ReplyDelete
  3. நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து
    பொறி வாசல் போர் கதவம் சார்த்தி அறிவானாம் >>> அருமை ... கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete