Wednesday, November 6, 2013

பாவின் இன்னிசை பாடித்திரிவனே!

மதுரகவி ஆழ்வார்  இயற்றிய  இரண்டாம் பாடல் இன்று
அந்தாதி வரிசையில் பாடல்கள் அமைந்துள்ளன.  முதல்பாடலின் கடைசி  சொல் நாவுக்கே  என முடிந்தது இப்பாடல் அந்த சொல்லை  முதலில் கொண்டு தொடங்குகிறது.

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் திருவடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை  பாடித்திரிவனே!



எனது நாவினால்  நம்மாழ்வாரைப்பற்றிப்பேசி (நவிலுதல்=உரைத்தல்)  மகிழ்ச்சியை அடைந்தேன்   அவனது  பொன்னான திருவடியைப்பற்றினேன் 
உண்மையில்  வேறு தெய்வம் ஏதும்  நானறியேன்  குருகூர்நம்பியின்  பாசுரங்களை இன்னிசையுடன் பாடித்திரிவேனே!

குருவே  தனக்கு தெய்வம் என்கிறார் ஆழ்வார் இப்பாடலில். அவரைப்பற்றி பேசுதல் மகிழ்ச்சியாம்  அவரது பாக்களை இசைபடப்பாடித்திரிதலை  பெருமைபட கூறுகிறார்!
 

3 comments:

  1. சாதாரண மக்களுக்கு அநேக கடவுள்கள். எல்லோரிடமும் பக்தி செலுத்துவோம்.ஆனால் மதுரகவி அழ்வாருக்கோ நம்மாழ்வாரை விட்டால் வேறு பெருமாள் இல்லை.அவரிடமே தஞ்சம்.அவரும் இவரை கைவிட்டுவிடவில்லை.தன்னுடைய பாசுரங்களை எல்லாம் இவரிடம் சொல்லி இருக்கிறார்.
    மதுரகவியோ மிக குறைந்த பாசுரங்களை அதுவும் நம்மாழ்வாரின் மேலேயே பாடி ஆழ்வார் ஸ்தானம் பெற்று இருப்பது ரொம்பவும் விசேஷம்.இன்றைய பாசுரத்திலேயே அவரின் குரு பக்தி வெளிப்படுகிறது..
    இதை எல்லாம் நமக்கு அறிமுகபடுத்தும் ஷைலஜாவின் இந்த கைங்கரியம் மிக்க ச்லாகிக்க வேண்டிய விஷயம்

    ReplyDelete
  2. அழகுற கருத்து சொல்லி இருக்கும் கேபி சாருக்கு அன்புகலந்த நன்றி. இப்படி பெருமைகொண்டவர்களைப்பற்றி எழுத என்னைத்தூண்டிய இறை அன்பருக்கு நன்றி. அரஙக்ன் அருளோடு இதை நான் தொடர்ந்து செய்துகொண்டே போகவேண்டும்

    ReplyDelete
  3. அபிராமி அந்தாதி திகட்ட திகட்ட படித்துள்ளேன் ...இப்போதுதான் மதுரகவி இயற்றிய அந்தாதி அறிகிறேன் அருமை... கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete