Saturday, November 9, 2013

அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே!

நம்பினேன் பிறர் நன்பொருள்தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்
செம்பொன் மாடத்திருகுருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே!

இந்தப்பாசுரத்தில்... 




ஸ்ரீ மதுரகவிகள் தம்முடைய குற்றங்களையும், ஸ்ரீ நம்மாழ்வார் தமக்குச் செய்த மகா உபகாரத்தைப் பற்றியும் சொல்கிறார். குற்றங்கள் ஆவது – பிறருடைய பொருள்களையும், பெண்களையும் நம்பி இருந்தமை. உபகாரம் என்பது ஆழ்வாரிடத்திலே கடாக்ஷம் பெற்றது.

தனது இழிமையைப்பாராமல்  நம்மாழ்வார்  தன்னை அன்பனாய்  நம்பிக்கைக்கு உரியவனாய் ஆக்கியமைக்கு அவருக்கே  தனது கைங்கர்யப்பலனை சித்தித்தமைக்கு மங்களா சாசனம்  பாடுகிறார்.
 

3 comments:

  1. நல்லவர்களைத்தான் சேர்த்து கொள்வேன் என்று இருந்தால் பிழை செய்தவர்களுக்கு போக்கிடம் ஏது?ஆகையால்தான் மகான்கள் தவறு செய்தவர்களை கூட மனம் திருந்தி இருந்தால் அடைக்கலம் கொடுத்து மேலே வர உதவுவார்கள் .
    மதுர கவி குருகூர் நம்பியிடம் சரண் அடைந்து அவரின் அனுக்ரஹத்தை பெற்றது பற்றி இந்த பாசுரத்தில் சொல்லி இருக்கிறார்.

    ReplyDelete
  2. கேபி சார் அருமையாக விளக்கினீர்கள் நன்றி மிக

    ReplyDelete