Sunday, November 10, 2013

இகழ்வு இலன் காண்மினே!

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத்திருக்குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே.

இன்றிலிருந்து  காலத்திற்கும் எம்பிரானாகிய நம்மாழ்வார்   தனது  பெருமையைக்கூறும்  அருளுக்கு என்னைப்பாத்திரமாக்கினான்.  மறுபடி   இகழ்வான  காரியத்தில் எனக்கு ஈடுபாடு வராதபடி  என்னைவைத்திருக்கிறான் குன்றமாடத்திலிருக்கும் குருகூர் நம்பியான  சடகோபன்.

ஆழ்வார் பெருமானின்  கடாட்சம்  தனக்கு இருப்பதால் இழிவென்பது  இல்லை என்கிறார் மதுரகவி.

1 comment:

  1. குருவின் கடாக்ஷம் ஒரு கவசம் மாதிரி.கெட்ட எண்ணங்களை அருகில் நெருங்க விடாது.மாறாக அவரின் அருள் நம்மை மேம்படுத்தும்.என்பதை கூறுகிறது இந்த பாசுரம்.
    நன்றி ஷைலஜா .இப்பொழுது உங்கள் பதிவுகளை எளிதில் படிக்க முடிகிறது.

    ReplyDelete