Wednesday, November 13, 2013

அடிமைப்பயன் அன்றே.

மிக்க வேதியர்* வேதத்தின் உட்பொருள்*
நிற்கப் பாடி* என் நெஞ்சுள் நிறுத்தினான்*
தக்க சீர்ச்* சடகோபன் என் நம்பிக்கு* ஆட்
புக்க காதல்* அடிமைப் பயன் அன்றே*


வேதத்தின் சாரம் திருவாய்மொழி, திருவாய்மொழி பத்துப்பத்துகளுக்கும் சாரம் பயிலும் சுடரொளி மற்றும் நெடுமாற்க்கடிமைப் பாசுரங்கள். சிறந்த பண்டிதர்களால் ஓதப்படும் வேதசாரமான திருவாய்மொழி திவ்யப் ப்ரபந்தத்தைக் கல்லில் குழியிட்டு நீர் நிறுத்துவதைப் போல, கல் போன்ற தம் மனதைக் கரைத்து அதில் திருவாய்மொழிப் பாசுரங்களை நிறுத்தினார் சுவாமி என்று அருளுகிறார் ஸ்ரீ மதுரகவிகள். அவருக்கு எவ்வளவு மேன்மை சொன்னாலும் அது மிகை ஆகாது என்றும், மேலும் நம்மாழ்வாரின் திருவடிகளில் ஏற்ப்பட்ட பக்தியே, அவருக்கு அடிமையாய் இருந்து கைங்கர்யம் பண்ணும் பிரயோஜனம் கிடைத்தது என்றும் மங்களாசாசனம் பண்ணுகிறார் இப்பாசுரத்தில்

3 comments:

  1. மதுரகவி ஆழ்வார் பிரார்த்தித்தபடி மாறன் சடகோபன் நான்கு வேதத்தின் சாரத்தையும் பிழிந்து நான்கு பிரபந்தங்களாக அருளினார்..அதில் சிறப்பு மிக்கது திருவாய்மொழியாகும். இந்த போக்கிஷத்துக்கெல்லாம் நாம் மதுர கவி ஆழ்வார்க்கு என்றென்றும் கடன் பட்டிருக்கிறோம்

    ReplyDelete
  2. கேபிசாருக்கு மிக்க நன்றி பொக்கிஷப்பெருமையினை நன்கு உரைத்தீர்கள்

    ReplyDelete