Wednesday, November 20, 2013

அறிகிலேன் நீ கண்ட நெறி!

பார் அளவும் ஓர் அடி வைத்து, ஓர் அடியும் பார்  உடுத்த
நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே, சூர்  உருவின்
பேய் அளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீ அளவு கண்ட நெறி.


பொய்கை ஆழ்வார்  அருளிய 3வது  பாசுரம்...

 இந்தப் பாசுரமும் ஆயனுக்கே

உலகையே  காலால் ஒரு சுற்று சுற்றி அளந்தவன்

-பார்(உலகு) அளவும் ஓர் அடி வைத்து -ஆரண ஜாலம் தாண்டி நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே

-உடனே கிருஷ்ணா அவதாரம் சூரு-அழகான பெண் போல்–(இங்கே  யசோதை)

தேவ கணம் சேர்ந்தவள்..-பேய்(பூதனை) அளவு–உயிரோடு சேர்த்து பாலை உரிந்தாய்–
அறிகிலேன்–இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் …

அவளை உறிஞ்சு விட்டாய்–

 என்ன -சங்கல்பம் என்ன அறிகிலேன்

 

1 comment:

  1. இந்த பாசுரத்தில் பொய்கை ஆழ்வார் வாமனாவதாரத்தில் பகவான் தன் அடியால் மூவுலகை அளந்தது பற்றியும் கிருஷ்ணாவதாரத்தில் பூதனை சம்ஹாரத்தை பற்றியும் முடிச்சு போட்டு எல்லாம் ஒருவனே என்பதை காட்டுகிறார்.பகவானுடைய சங்கல்பம்தான் என்னவென்று புரியாத நிலையிலும் உள்ளார்

    ReplyDelete