Friday, November 22, 2013

உருவம் எரி கார்மேனி ஒன்று!

பொய்கைஆழ்வாரின் 5ம்பாசுரம்

அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள் ஊர்தி
உரை நூல் மறை உறையும் கோயில் -வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஓன்று
 
 
அரியும் சிவனும்  ஒன்று என்பதான   பாசுரம்!
 
சங்கர நாரணன் -வாகனம் ரிஷபம் தர்ம சொரூபம்
 
 கருடன் வேத சொரூபம் .
 
.தானம் போன்ற நான்கு கால்கள் ரிஷபம்
 
..நிகமம் ஆகமம்–வேதம் சொல்லும் நாராயணன் பெருமை/
 
வரை=கைலாசம்
 
நீர் =கடல் பெண் எடுத்தது அங்கு இருந்து பர்வத ராஜ குமாரி பார்வது
 தொழில் கை ஆயுதம்
 
 அடுத்து சொல்கிறது உருவம் எரி
 
அதாவது அக்னி போல சிவன்
 
இவனோ கார் மேனி முகில் வண்ணன்
 
 -சர்வமும் அவனே..வாசுதேவ சர்வம் இதி –
 
 
 
அன்னான்தனை, ஐயனும்,
     ஆதியொடு அந்தம் ஒன்றாம்
தன்னாலும் அளப்ப அருந்
     தானும், தன் பாங்கர் நின்ற
பொன் மான் உரியானும்
     தழீஇ எனப் புல்லி, பின்னை,
சொல் மாண்புடை அன்னை
     சுமித்திரை கோயில் புக்கான்.
 
கம்பனும்  இப்படி சொல்கிறான்
 
ஐயனும்- இராமனும்; ஆதியொடு அந்தம் ஒன்றாம் தன்னாலும்
அளப்ப அருந் தானும்
- முதலும்  முடிவும் ஒன்றாக உள்ள தன்னாலும்
வரையறுத்துக் கூறமுடியாதுள்ள திருமாலாகிய தானும்; தன் பாங்கர்
***பொன்னிறமான மான் தோலை  உடைய சிவபிரானும்;  தழீஇஎன -
தழுவிக் கொண்டாற் போல;  அன்னான் தனை- அந்த இலக்கு
வனை;
புல்லி - தழுவி;  பின்னை- பிறகு; 
மாண்பு  உடை சொல்
அன்னை
- மாட்சிமை உடைய சொற்களை உடையளாகிய சுமித்திரைத்
தாயின்;  கோயில் புக்கான் -மாளிகையைஅடைந்தான்.
     இராமன் இலக்குவனைத் தழுவிய காட்சி திருமால் சிவபெருமானைத்
தழுவி  நின்றது போலும் என்றார்.  இலக்குவன் பொன்னிற மேனியன்
ஆதலின் பொன்னிறமான மான் உரி போர்த்தசிவபிரான் போல ஆயினன்.
!

3 comments:

  1. முதற்கண் என் வேண்டுகோள் என்னவென்றால் படிக்க எளிதான நிறத்தில் வார்த்தைகளை அமைக்கவும்.வயதானவர்களுக்கு படிக்க ச்ரமம்.
    திருமாலை தவிர்த்து தெய்வம் என்று ஏத்தேன் என்றெல்லாம் பாடிய ஆழ்வார் மாலும் சிவனும் ஒன்று என்றே எனக் கருதியும் எழுதியும் உள்ளார்.
    மிக அழகாக விளக்கி இருக்கிறீர்கள்.நன்றி.

    ReplyDelete
  2. அருமை... நல்ல விளக்கம்... நன்றி...

    ReplyDelete
  3. கருத்துக்கு நன்றி கேபி சார் இப்போ நிறம் மாற்றிட்டேன்

    டிடி உங்கலுக்கும் நன்றி

    ReplyDelete