Saturday, November 23, 2013

கண்டேன் திருவரங்க மேயான் திசை!

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ? ஏழைகாள் – அன்று
கருவரங்கத்துள்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்கமேயான் திசை” –


 ஆறாவது பாசுரத்தில்  அரங்கனிடம்  வந்துவிட்டார்!

இதன் விளக்கம் என்  சிற்றறிவுக்கு எட்டியவரை...

கடல் வண்ணத்துப்பெருமானை நான்  ஒருக்காலும் மறப்பதில்லை  இன்று நான் மறப்பேன் என  நினைத்தீர்களோ (அவனை நினைக்காத)  ஏழைகளே!(அரங்கச்சொத்து  இல்லாதவர்கள் ஆழ்வார்பெருமானுக்குஏழைகளாம்)
 அன்று  தாயின் கருவறைக்குள் இருந்தபடியே  கைதொழுதேன்  அவன் திசை திருவரங்கமேயாகும் என  கண்டுகொண்டேன்!

கர்ப்பவாசத்திலேயே ,மறக்காத நான்  இன்று மறப்பேன் என்று நினைத்தீர்களா அறிவுகெட்டவர்களே(ஏழைகாள்) என்றும்   இப்பாட்டிற்கான  அர்த்தம்  ஆராய்ந்துபார்த்தால்  கடலாய் விரிகிறது. அதன் ஒரு துளியாய்  இங்கு  அரங்கனுக்கும் ஆழ்வார் பெருமானுக்கும் சமர்ப்பணம்!

     
ஏழை என்பதற்கு இவர் பெரியபெருமாளை இழந்து நிற்பவர்கள், பெருஞ்செல்வம் படைத்தோராயினும் ஏழையே என்கிறார்

3 comments:

  1. வேங்கடத்தை பாடிய அளவு திருவரங்கம் பற்றி பொய்கை ஆழ்வார் அதிகம் பாடியதாக தெரியவில்லை என்று படித்து இருக்கிறேன்.
    இருப்பினும் இந்த பாசுரத்தில் அரங்கத்து பெருமையினை பாடியுள்ளார்."தாயின் கருப்பையில் இருந்த போதே திருவரங்கத்து திசை நோக்கி தொழுதேன் 'என்கிறார்.

    ஏழைகள் என்பதற்கு உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது.இறை அனுபவத்தை இழந்தவர்களும் அவரை மறந்தவர்களும் தான் உண்மையான ஏழைகள் என்பதில் சர்ச்சை உண்டோ?

    ReplyDelete
  2. விளக்கம் உண்மை....

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நன்றி கேபி சார் அரங்கத்துப்பெருமையினை இந்த ஒரு பாசுரத்தில் அருளிவிட்டார் பாருங்களேன்நன்றி கருத்துக்கு


    டிடி அவர்களுக்கும் நன்றி மிக

    ReplyDelete