Sunday, November 24, 2013

கார் ஓத வண்ணன் படைத்த மயக்கு

  பொய்கை ஆழ்வாரின் 7வது பாசுரம் இது

திசையும்  திசை உறு தெய்வமும்   தெய்வத்து
 இசையும்  கருமங்கள் எல்லாம் அசைவு இல சீர்க்
கண்ணன்  நெடுமால் கடல் கடைந்த கார் ஓத
வண்ணன் படைத்த மயக்கு


எல்லா  திசைகளையும் அந்த திசைக்கான தேவதைகளையும்  அவைகள்  புரியவேண்டிய செயல்களையும்(கடமைகளையும்)  எல்லாவற்றையும்  அசைவு இல  சீர்க் கண்ணன் நெடுமால்  கடல கடைந்த  கருத்த குளீர்ந்த பெருமான் ப்டைத்த  மயக்கத்திற்குரியதாகும் அதாவது  நிலையானது  அசைவு இல்லாத  கண்ணன்  தான்  மற்றவை  மயக்கத்திற்குரியவை நிலையானதல்ல  என்கிறார்.. மேலும் நல்ல விளக்கங்களை ஆராய்ந்து மறுபடி எழுதுகிறேன்

4 comments:

  1. திசைகளையும் அந்த திசைகளில் விளங்கும் பல தெய்வங்களையும், அந்த தெய்வ வடிவங்களை ஆராதிக்கும் செயல்களையும் எல்லாம் அசைவு இல்லாத இறைவன் நெடுமாலாகிய எழுந்து , படைத்து தன் பால் ஆன்மாக்களை ஈர்க்கும் ஓர் உத்தியாக ஒரு வித மயக்கமாக கொள்ளலாம் என்று படித்தேன்.வேறு விதமாகவும் இதற்கு அர்த்தம் கூறுகிறார்கள்..

    ReplyDelete
  2. // மயக்கத்திற்குரியவை நிலையானதல்ல... //

    அருமை... உண்மை...

    ReplyDelete
  3. அர்த்தம் உங்கள் வார்த்தைகளிலும் அருமை கேபி சார் ஆனால் இன்னமும் ஆழ்ந்து யோசித்து எழுதும் ஆவலில் இருக்கிறேன் ஒருநாள் எழுதிவிடக்கூடும்!


    டிடி....நீங்களும் வாசிப்பதில் மகிழ்ச்சி

    ReplyDelete
  4. உங்கள் ஆன்மீக பணி தொய்வில்லாமல் தொடரவேண்டும்...வாழ்த்துக்கள். கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete