Wednesday, November 27, 2013

் உலகளவு உண்டோ உன் வாய்?

 
மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,
விண்ணும் விழுங்கியது மெய்யென்பர், - எண்ணில்
அலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ்
வுலகளவு முண்டோவுன் வாய்?
 
விளக்கம்
 
பூமியை  மலைகளை  அலையடிக்கும் கடலை  காற்றினை  விண்ணை  எல்லாம்  நீ    விழுங்கியது  உண்மை என்பார்கள்  அடியார்கள்.  எண்ணிப்பார்த்தால்   மிகுந்த  கல்யாண  குணங்களை  உடைய  கடல்போன்றவனான  உன் வாயானது   அன்று அதாவது  யசோதைக்கு  வாயில்  உலகைக்காட்டியபோது-  இந்த உலகளவு   விசாலமாக  இருந்திருக்குமோ?

4 comments:

  1. திண்டுக்கல் தனபாலன் மிக அழகாக வும் சுருக்கமாகவும் சொல்லி விட்டார்.
    பெரிய சமாசாரங்களை எல்லாம்(பூமி,கடல்,மாருதம்,ஆகாசம் என பல விஷயங்கள்) எளிதில் விழுங்கிய வாய் ரொம்ப பெரிதாக இருக்குமோ என ஆச்சரியப்படுகிறார் .ஏனென்றால் இதே வாய்தான் இடைச்சியிடம் சிறிய அளவில் வெண்ணையை விழுங்கியதனால்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி டிடி மற்றும் கேபி சார்/ எத்தனை அழகாக கருத்து சொல்கிறீர்கள் இருவரும் ! மகிழ்ச்சி மிக

    ReplyDelete
  3. மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,
    விண்ணும் விழுங்கியது மெய்யென்பர் ... உண்மை ... கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete