Friday, November 29, 2013

அவியாத ஞானமும் வேள்வியும் நல்லறமும்....

 
செவிவாய் கண்மூக் கு   உடலென் றைம்புலனும்
செந்தீபுவிகால் நீ்ர் விண் பூதமைந்தும் -அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமுமென்பரே
ஏனமாய் நின்றாற் கியல்வு.
 
 
ஏனமாய் நின்றார்க்கு   என்பதை முதலில் கொள்ளவேண்டும் அதாவது  
 
வராஹ அவதாரம் செய்து  தானே  செயல்களைப்புரியும் பெருமானைப்பெறுவதற்கு
 
செவி வாய் கண் மூக்கு உடல் என்று பஞ்ச இந்திரியங்களும்
சிவந்ததீ     பூமி காற்று(கால்) நீர்     வானம் என்னும்   பூதங்களால் ஆன தேகமும்
இடைவிடாமல் பெருமானை சிந்திப்பதற்கான பக்தியும்
அந்த பக்தி வளரக்காரனமாக இருக்கிர  அக்னிஹோத்திரம் போன்ற வேள்விகளும்
பக்தியை வளர்க்கக்கூடிஅய் விவேகமும் தர்மமும்
இயல்வு என்பரே....சாதனங்கள் என்று சொல்கிறார்களே  இது தகுதியோ?
 
 
 
ஆபத்து நேரிடும்போது, தானே வந்து பாதுகாப்பவனன்றோ எம்பெருமான் என்னவேண்டி ஏனமாய் நின்றாற்கு என்கிறார்
  மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாய்த் திருவவதரித்து அரியன செய்ததெல்லாம் அடியார்க்கன்றோ?.
 
 

5 comments:

  1. பகவானை அடைய பஞ்சேந்த்ரியங்கள்,,பஞ்ச பூதங்களால் ஆன சரீரம்,,ஞானம் , எல்லாம் ஓர் உபாயமாக சொல்லுகிறார்களே. எம்பெருமான் பக்தர்களுக்காக தானே வராஹமூர்த்தியாய் அவதரித்தவரல்லவோ.அவரே அவரை அடைய வழியாக இருப்பவரஅல்லவோ..பின் எதற்கு மற்றவையெல்லாம் என்றும் அர்த்தம் கூறுகிறார்கள்
    .ஓரிடத்தில் எம்பெருமானையே ச்ரவணம்,ஸ்மரணம்,பஜனம் பண்ணு என்கிறார்கள்.பிறிதொரு இடத்தில் அவனே நம் ஆபத்து காலத்தில் நம்மை ரக்ஷிப்பான் என்றும் வியாக்யானம் செய்கிறார்கள். .இப்படி கூறுவதற்கு எனக்கு புலப்பட்ட காரணம் எம்பெருமானின் மேன்மையை அவரின் உதார குணத்தை காட்டத்தான் என்று. .

    ReplyDelete
  2. நன்றி கேபிசார்
    அருமையான விளக்கம் ஆனால் எனக்கு இன்னமும் இப்பாசுரத்தில் ஆழ்ந்துபோக ஆசை ..நேரம் கிடைக்கும் போது மறுபடி எழுத வேண்டும்

    நன்றி டிடி தங்களுக்கும்

    ReplyDelete
  3. Vazhthukkal, I am KP sir's friend shanthi

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சாந்தி.நல்வரவு தங்களைப்பற்றி பெருமையாக திரு கேபி சார் சொல்லி இருக்கிறார் உங்கள் வலைப்பூ முகவரியும் தந்தார் மேலோட்டமாய் பார்த்துவிட்டேன் ‘பாதங்கள் இவையென்னில் படிமங்கள் எப்படியோ’என்றான் கம்பன் உங்கள் கைவண்ணம் பிரமிக்க வைக்கிறது.
      ஆழ்ந்து வாசித்து கருத்தினைக்கூற வருகிறேன் நன்றி மிக இங்கு வந்தமைக்கு

      Delete
  4. KParthasarath விளக்கம் அருமை ... தொடரட்டும் உங்கள் பணி.... கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete