Saturday, November 30, 2013

ஆதியாய் நின்றார் அவர்!

 
இயல்வாக ஈன்துழா யானடிக்கே செல்ல,
முயல்வார் இயலமரர் முன்னம், - இயல்வாக
நீதியா லோதி நியமங்க ளால்பரவ,
ஆதியாய் நின்றார் அவர்.
 
அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானது திரு வடிகளில் கிட்டுதற்குத் தகுதியாக  முன்னம்(பலகாலமாக)  முயற்சி செய்தவர்கள் (யாரென்றால்) இயல் அமரர் அதாவது தகுதிக்குரிய  நித்ய சூரிகள்,(இவர்களைப்போல நாமும் அவனது திருவடிக்குப்பாத்திரமாக வேண்டுமெனில்)  இயல்வு ஆக--அதற்குப்பொருத்தமாக  நீதியால் ஓதி... வேதம்  ஓதி..நியமங்களால் பரவ--- அந்த வேதம் கூறிய பொருளை அறிந்து அதன்படி நடக்குமாறு ஆதியாய்---முற்பட்டு நிற்கிறார்
அவர்-எம்பெருமான்.
 
எம்பெருமானை  அடைய  நித்யசூரிகளுக்கு மட்டுமில்லை நமக்கும் அத்தகுதியை  உண்டாக்கவே  ஆதியாய்  நமக்காக  நம்மை செயல்படுத்த  பெருமான்  காத்திருக்கிறாராம்  என்னே  கருணை அவனுக்கு!  வேதம் ஓத முடியாதவர்கள்  திவ்யபிரபந்தம் எனும் வேதத்திற்கு சமமான  ஆழ்வார் பெருமான் பாசுரங்கள் வாசித்து ஆழ்ந்து ஆராதனை செய்து உய்வோமாக.

4 comments:

  1. வேதம் ஓதி,நியமங்கள் கடைப்பிடிக்க இயலாதவர்கள் தமிழ் மறையான திவ்ய பிரபந்தத்தையே தினம் அனுசந்தித்து எம்பெருமான் கிருபையை அடையலாம் என்று.மிக அழகாக சொன்னீர்கள்.
    அதற்க்கு ஏதுவாக நீங்களும் ஒவ்வொரு பாசுரமாக விரிவாக்கம் செய்கிறீர்கள்..

    ReplyDelete
  2. அருமை... அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நன்று சொன்னீர்கள் கேபி சார் பிரபந்தம் வேத சாரம் என்பதால் சொன்னேன் சரியாகத்தானே இருக்கும் என்று எண்ணம்..

    நன்றி டிடி அருமை என்றதற்கு

    ReplyDelete
  4. இறையருள் கிட்டும் திவ்யபிரபந்தம் ஓதுவோர் உய்யட்டும்... கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete