Saturday, November 16, 2013

அடைந்தவர்கட்கெல்லாம் அன்பன்.!

அன்பன் தன்னை* அடைந்தவர்கட்கெல்லாம்
அன்பன்* தென் குருகூர் நகர் நம்பிக்கு*
அன்பனாய்* மதுர கவி சொன்ன சொல்
நம்புவார் பதி* வைகுந்தம் காண்மினே*



எனது  அறிவிற்கு எட்டிய  விளக்கம்.


அன்பனான   மதுரகவியின்  ஆச்சார்யப்பெருமான்  தன்னை அடைந்த அனைவருக்கும்  அன்பன்  ஆன நம்மாழ்வார்மீது அன்பு கொண்டவனான  மதுரகவி  இயற்றிய  பாசுரங்களை  பாடுவோர்பரமபதம்  அடைவார்கள் என நம்பிக்கை கொள்ளலாம்
கடைசி பாசுரத்தில் திருநாடு  வைபவத்தை  வைகுந்தம்  சென்றுவந்த வள்ளலின்  சீடரான  மதுரகவி    அருளி இருப்பதில்  வியப்பென்ன!



ஆழ்வார் அன்பரின் விளக்கம்
தன்னை அடைந்தவர், அடையாதவர் எல்லோரிடத்திலும் அன்புடன் இருப்பவர் எம்பெருமான்(வாத்சல்யம்). எம்பெருமானுக்கு உகப்பாக காரியங்களைச் செய்பவரே அடியார்கள் ஆவர். ஆக எம்பெருமான் உகந்ததைப் பற்ற வேணும் என்றால் அவன் அடியார்களைப் பற்ற வேண்டும். அதனால் அஞ்ஞான இருளைப் போக்குபவரான, எம்பெருமான் மிகவும் உகக்கும் ஆசார்யானையே முதலில் தாமும் முதலில் பற்றி நமக்கும் வழி காட்டுகிறார் ஸ்ரீ மதுரகவிகள். ஏன் என்றால் ப்ராப்திக்கு எல்லையும், புருஷகாரம் செய்பவரும் அவரே. இப்பாசுரங்களைத் தஞ்சமாகப் பற்றுபவருக்கு இடம் திருநாடான திருப்பரமபதம் ஆகும் என்று பூர்த்திஆகிறது இத்திவ்யப்ரபந்தம்

3 comments:

  1. திருக்கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. எளிய நடையில் மதுரகவி ஆழ்வாரின் கண்ணினும் சிறு தாம்பு பாசுரங்களை விளக்கி நம் எல்லோரையும் இதில் லயிக்கும்படி செய்தமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete