Monday, November 4, 2013

என் அமுதினைக்கண்ட கண்கள்!

கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணை
 உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக்காணாவே!

மேக வண்ணன்  ஆயர்பாடியில் கோ எனும் பசுக்களை ரட்சித்தவன்
வெண்ணையை உண்ட  திருவாய் உடையவன் என் உள்ளத்தைக்கவர்ந்தவன்
தேவர்களின் தலிவனான  அழகிய நகரின் அரங்கப்பெருமான் அவன் என் அமிர்தம் அவனைகக்ண்ட  கண்கள் மற்றொன்றினைக்காணாது.காணத்தான் முடியுமோ!!!

பாணர்பெருமானுக்கு நெஞ்சும் கண்ணும் நிறைகிறது இப்பாடலுடன்..ஆண்டாளைப்போல  இவரையும் தன்னோடு ஐக்கியப்படுத்திக்கொள்கிறான் அரங்கன்
அரங்கன் கோவிலில் நுழைவாயிலிலேயே  இடப்பக்கம். ஆண்டாளுக்கு சந்நிதி வலப்பக்கம் அவளுக்கு எதிர்சந்நிதியில்  திருப்பாணாழ்வார் நமக்கு அருள்தர காத்திருக்கிறார்.

திருப்பாணாழ்வாருக்கான வாழித்திருநாமமுடன்
திவ்யபிரபந்தம்  பகுதியின்  முதல் பத்துபாடல்களாய்  இந்த அரங்கப்ரியா தேர்ந்தெடுத்த  பாசுர வரிசை  நிறைவுபெறுகிறது.அடுத்து மதுரகவியை கொண்டுவர ஆர்வம்!

 உம்பர் தொழு மெய் ஞானத்து உறையூரான் வாழியே
உரோகிணி நாள் கார்த்திகையில் உதித்த வள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனி தோளில் வந்த பிரான் வாழியே
மலர்கண்ணை வேறொன்றில் வையாதான் வாழியே
அம்புலியில் மதிலரங்கர் அகம் புகுந்தான் வாழியே
அமலனாதிப்பிரான் பத்துமருளினான் வாழியே
செம்பொன் அடி முடியளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகத்தலத்தில் வாழியே!


திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்!
 

2 comments:

  1. "அண்டர்கோன், அணியரங்கன், என் அமுதினைக்
    கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே"என அவரின் வேண்டுகோளை கேட்டபின் உடனேயே அரங்கன் தன வசம் அவரை ஐக்கியபடுத்தி கொண்டு விட்டான் போலும்..
    அழகாக நிறைவு பெற செய்தீர்கள் வாழிய நாமத்துடன்
    .
    மதுரகவி ஆழ்வாரின் பாசுரங்களை பற்றி கேட்க ஆவலாக உள்ளேன்

    ReplyDelete
  2. ஆஹா ஆஹா படிக்க படிக்கச் தித்தித்து திகட்டுகிறதே !!! கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete