Thursday, November 7, 2013

அடியேன் பெற்ற நன்மையே!

திரி தந்தாகிலும் தேவர்பிரானுடை
கரிய கோலத்திரு உருவம் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர்நம்பிக்காள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மைக்கே
 
 
3வது  பாசுரத்தில்   தேவபிரானைக்கண்டதாய் சொல்கிறார் பாருங்கள்!  தேவு மற்று அறியேன்  என்றார் முந்தையப்பாடலில். இந்தப்பாடலில்  எங்கே திரிந்தாலும்  தேவர்களின் பிரானின்  கரிய  கோலத்திரு உருவைக்காண்பாராம்!  குரு பக்தி இருக்கிறவனை  அண்ணல் கைவிடுவாரா  காட்சி அளிக்கத்தான் செய்வார். நம்மாழ்வாருக்கு உரியவனாய் இருப்பதால் அவர் பெற்ற நன்மை   இதுதான்!
 
பாடலின்  உட்பொருள்  மிக ஆழமானது.அனுபவித்துப்பின் விளக்கவேண்டும்.

3 comments:

  1. குருவின் அருள் இருந்தால்,அண்ணலின் அருளும் நிச்சயம் உண்டு என்பதை குறிக்கும் பாசுரம்.நன்றி ஷைலஜா

    ReplyDelete
  2. நன்றி கேபி சார் ...

    ReplyDelete